தெய்வ மச்சான் விமர்சனம்

 தெய்வ மச்சான் விமர்சனம்

விமல், பாலசரவணன், அனிதா சம்பத், தீபா ஷங்கர், பாண்டிராஜ், “கிச்சா” ரவி, வேல ராமமூர்த்தி, “ஆடுகளம்” நரேன் நடிப்பில், மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தெய்வ மச்சான்”.

எதை பேசுகிறது இப்படம்?

கதாநாயகனான விமல், தனக்கு நடக்கும் ஒரு பிரச்சனையை எப்படி கையாண்டார் என்பதை நகைச்சுவையாக பேச நினைத்துள்ளது இப்படம்.

கதைப்படி,

விமலின் தங்கையான அனிதா சம்பத்தை தனது தம்பிக்காக பெண் கேட்டு வருகிறார் “ஆடுகளம்” நரேன். ஆனால், அந்த மாப்பிள்ளையோ வயதில் மூத்தவர் என்பதால். அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் விமல்.

அதனால், அனிதா சம்பத்தின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்றும். விமல் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்கிறார் “ஆடுகளம்” நரேன்.

மறுபுறம், வேல. ராமமூர்த்தி குதிரை மீது அமர்ந்து வேட்டைக்காரராக வருகை தந்து நாயகனான விமல் கனவில் சொல்வது எல்லாம் நடந்து விடும். அவர் கனவில் வந்து சொன்னவை எல்லாம் நடந்துதா..? இல்லையா..? “ஆடுகளம்” நரேன் விமலை பழி தீர்த்தாரா? என்பது தான் இப்படத்தின் கதை…

விலங்கு படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த நாயகன் விமல், கமெர்சியல் ஹிட்டுக்காக இப்படத்தில் நடித்துள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, களவாணி படத்தில் பார்த்த விமலை மீண்டும் இப்படத்தில் பார்க்கலாம்.

“ஆடுகளம்” நரேன் நகைச்சுவை வில்லனவா வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அனிதா சம்பத், கிராமப்புறத்து பெண்ணாக பொருந்தியுள்ளார். ஆனால், எக்ஸ்பிரேஷன்கள் ஏதும் இல்லை அவரின் நடிப்பில்.

பால சரவணன், மற்றும் அனிதா சம்பதின் கணவனாக வரும் இருவரும் படத்திற்கு பெரும் பலமாக அமைத்துள்ளனர்.

தீபா ஷங்கரின் கதாபாத்திரமும் நடிப்பும், முந்தைய படங்களை விட தேர்ச்சி பெற்றுள்ளது. விலங்கு படத்தில் “கிச்சா” பாத்திரத்தில் நம்மை மிரட்டிய ரவி, இப்படத்தில் காமெடியனாக வந்து கலக்கியுள்ளார்.

காட்வினின் இசை காமெடி காட்சிகளில் சிரிப்பை வரவைக்கவும், செண்டிமெண்ட் காட்சிகளிலும் படத்தின் போக்கு மாறாமல் இசையமைத்து பாராட்டை பெறுகிறார்.

இளையராஜாவின் படத்தொகுப்பு சிறப்பு. படத்திற்கு எது தேவையோ அதை மட்டும் வைத்து படத்தின் ஓட்டத்திற்கு உதவியுள்ளார்.

மார்ட்டின் நிர்மல் குமாரின் கதையும், திரைக்கதையும் புதுமையாக இருந்தது. கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் வைத்திருக்கிம் ட்விஸ்ட் என சிரிப்புக்கு பஞ்சமே இல்லை.

ஆனால், முதல் பாதியில் கூடுதல் நகைச்சுவை சேர்த்து நம்மை உற்சாக படுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம்.

தெய்வ மச்சான் – பஞ்சமில்லா கலகலப்பு  – (3/5)

Related post