டெவில் விமர்சனம்

 டெவில் விமர்சனம்

இயக்கம்: ஆதித்யா

நடிகர்கள்: விதார்த், பூர்ணா, திரிகன், சுபஸ்ரீ

ஒளிப்பதிவு: கார்த்திக் முத்துக்குமார்

இசை: மிஷ்கின்

எடிட்டிங் – இளையராஜா

கதைப்படி,

விதார்த்தும் பூர்ணாவும் கணவன் மனைவி. திருமணம் ஆனதில் இருந்து விதார்த் தனது மனைவி பூர்ணாவிடம் எந்த விதமான மகிச்சியையும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.

காரணம் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கிறார். இந்த விஷயம் பூர்ணாவிற்கு தெரிந்து அதிர்ச்சியாகிறார். திருமணம் ஆன சில நாட்களிலே இந்த விஷயம் பூர்ணாவிற்கு தெரிந்து விடுகிறார்.

இந்த சமயத்தில் திரிகனின் அறிமுகம் பூர்ணாவிற்கு கிடைக்கிறது. திரிகன் தனது தாயிடம் காணாத ஒரு பாசத்தை பூர்ணாவிடம் எதிர்பார்க்கிறார். பூர்ணாவிற்கும் மனம் அங்குமிங்குமாக அலைபாய்கிறது.

இந்த சூழலில், அலுவலக பெண்ணனின் உண்மையான முகமறிந்து தன்னைத் திருத்திக் கொள்கிறார் விதார்த்.

தனது மனைவியுடன் உண்மையாக இருக்க விருப்பபட்டு பூர்ணாவிடம் சரணடைகிறார் விதார்த்.

அதன் பிறகு திரிகன் என்ன செய்தார்.? விதார்த் – பூர்ணா வாழ்க்கை எப்படி இருந்தது.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் விதார்த், வழக்கமான நடிப்பை இப்படத்திலும் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இதுவரை எந்த படத்திலும் இல்லாத அழகாக பூர்ணா இப்படத்தில் ஜொலித்திருக்கிறார். காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகூற கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

தனது கணவனை நினைத்து கத்தி அழும் காட்சியில் கண்களில் இருந்து ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விட்டார் பூர்ணா. அழகாகவும் அளவாகவும் தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார் பூர்ணா.

திரிகன் தனக்கு கொடுக்கப்பட்டத்தை அளவோடு செய்திருக்கிறார்.

காட்சிகள் ஒவ்வொன்றையும் மெனக்கெடல் செய்து அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். கதை பெரிதான தாக்கத்தை ஒரு இடத்திலும் ஏற்படுத்தவில்லை.. ஆனால் மேக்கிங் நிச்சயமாக கிங் தான்.

க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சி ஒட்டுமொத்த படத்தையும் மொத்தமாக சரித்து விட்டது.

இந்த மாதிரியான படத்தில் இப்படியொரு க்ளைமாக்ஸா என அனைவரும் ஏமாந்து தான் வர வேணடியதாகி விட்டது.

டெவில் – ஏமாற்றம் –  2.75/5

Spread the love

Related post