காதலை ஒப்புக்கொண்ட கெளதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்!!

நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும் நடிகருமான கெளதம் கார்த்திக் நடிப்பில் சில படங்கள் வெற்றி கண்டாலும், பல படங்கள் மண்ணை தான் கவ்வியிருக்கிறது.
இவரும் நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் பல வந்த வண்ணம் இருந்த நிலையில், தற்போது அது உண்மை என்று நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது குறித்து மஞ்சிமா மோகன், “மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்துபோன போது நீ ஒரு காவலனாய் என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய். நீ எப்போதும் எல்லாவற்றிலும் என்னுடைய ஃபேவரட்” eன்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படம் மஞ்சிமா மோகனுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது.