ஹனு மான் விமர்சனம்

 ஹனு மான் விமர்சனம்

இயக்கம்: பிரசாந்த் வர்மா

நடிகர்கள்: தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய்

இசை:

ஒளிப்பதிவு:

கதைப்படி,

அஞ்சானத்ரி என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் தேஜா சஜ்ஜா. இவரின் சகோதரியாக வருகிறார் வரலட்சுமி.

தம்பி மீது அலாதி பாசம் வைத்திருக்கிறார் வரலட்சுமி. சிறுவயதில் படிப்பிற்காக வெளியூர் சென்ற அம்ரிதா மீண்டும் அந்த கிராமத்திற்கு வருகிறார்.

அம்ரிதா மீது தேஜாவிற்கு சிறு வயதில் இருந்தே காதல். சின்ன சின்ன திருட்டை செய்வதில் தேஜாவிற்கு ஒரு சுவாரஸ்யம்.

அதே ஊரைச் சேர்ந்தவரான வில்லன் ராஜ் தீபக் ஷெட்டி, மக்களை அடிமையாக வைத்திருக்கிறார்.

அம்ரிதா ராஜ் தீபக்கின் பகையை சம்பாதிக்கிறார். அம்ரிதாவிற்காக ராஜ் தீபக்கை எதிர்க்கிறார் தேஜா..

திடீரென சக்தி கிடைத்தவராக பெரும் வீரனாகிறார் தேஜா. அந்த சக்தி அவருக்கு கிடைத்த ஒரு அபூர்வ கல். அந்த கல்லை கைப்பற்ற நினைக்கிறார் வில்லனாக வரும் வினய்.

அவரின் முயற்சியை தேஜா எப்படி முறியடித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் தேஜாவிற்கு இது ஒரு மிகப்பெரும் ஸ்டாராக உருவெடுத்திருக்கிறார். காதல், காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்து தளத்திலும் இறங்கி அடித்திருக்கிறார் நாயகன் தேஜா.. தெலுங்கு நடிகர் இந்திய நடிகர்காக உருவெடுத்திருக்கிறார் இப்படத்தின் மூலம்.

வழக்கமான கலகலப்பும், கோபம், வேகம் என தனது நடிப்பின் திறமையை அளவாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.

அம்ரிதாவின் அழகும் நடிப்பும் படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது.

சிஜி பணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இந்திய சினிமாவிலும் இப்படி ஒரு பிரமாண்டத்தை கொண்டு வருவோம் என்பதில் முத்திரை பதித்து நிரூபித்திருக்கிறது ஹனுமான் படக்குழு.

ஹனுமான் – GREAT –  3.25/5

Related post