ஜே பேபி விமர்சனம் 3.5/5

 ஜே பேபி விமர்சனம் 3.5/5

இயக்கம்: சுரேஷ் மாரி

நடிகர்கள்: ஊர்வசி, தினேஷ், மாறன்,

இசையமைப்பாளர்: டோனி பிரிட்டோ

ஒளிப்பதிவு: ஜெயந்த் சேது மாதவன்

படத்தொகுப்பு: சண்முகம் வேலுசாமி

தயாரிப்பாளர்கள்: பா ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஸ் இச்ங், சவுரேஷ் குப்தா, அதிதி ஆனந்த்

கதைப்படி,

கணவரில்லாத ஊர்வசிக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும்.

மூன்று ஆண்பிள்ளைகளில் அண்ணன் தம்பிகளாக வருகின்றனர் மாறனும் தினேஷும். தன்னை வேண்டாம் என்று சொன்ன ஒரு வீட்டிலிருந்து தம்பி தினேஷ் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், கோபம் கொண்ட மாறன், தினேஷுடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்கிறார். இருவரும் பேசிக் கொள்வதில்லை.

இந்த சமயத்தில், ஊர்வசிக்கு சற்று புத்திசுவாதினம் குறைய ஆரம்பிக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் இருப்பதாக லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தகவல் வருகிறது.

இதனைத் தொடர்ந்து தனது அம்மாவை அழைத்து வர, மாறனும் தினேஷும் கொல்கத்தா பயணப்படுகின்றனர்.

தனது தாயை மீண்டும் சென்னைக்கு இருவரும் அழைத்து வந்தார்களா.? இருவருக்கும் இடையே இருந்த கோபம் கலைந்ததா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒட்டு மொத்த கதையையும் தனதாக்கிக் கொண்டு படத்தை தாங்கிச் சென்றிருக்கிறார் நடிகை ஊர்வசி. தனது அனுபவ நடிப்பால் அனைவரையும் வெகுவாக கவர்ந்து, அக்கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு நடித்து கைதட்டல் வாங்கிக் கொள்கிறார் ஊர்வசி.

முதல் பாதியில் கல்கத்தாவிற்கு செல்லும் வரையிலும், அங்கு பயணப்படும் போதும் மாறனும் தினேஷும் நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளனர்.

மாறனின் டைமிங்க் காமெடி காட்சியாக இருக்கட்டும், தான் அவமானப்பட்ட நிகழ்வை சொல்லும் இடமாக இருக்கட்டும் என வந்த காட்சிகள் அனைத்திலும் நன்றாகவே நடித்து அப்ளாஷ் வாங்கிக் கொள்கிறார்.

தனக்கு என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை நேர்த்தியாக செய்து முடித்து அதில் வெற்றிக் கொள்பவர் நடிகர் அட்டகத்தி தினேஷ். மாறனுக்கும் சரிசமமான காட்சிகளை பங்கீடு செய்து கொடுத்து சக நடிகராக படத்தில் தோன்றி அசத்தியிருக்கிறார் தினேஷ்.

படத்தில் தினேஷின் சகோதரியாக நடித்தவரும் தனது அம்மாவின் மீது வைத்திருக்கும் பாசத்தை கண்களில் ஈரம் பொங்க சொல்லும் காட்சிகளில் நம்மையும் கண்கலங்க வைத்து விட்டார்.

படத்தின் இசை மிகப்பெரும் பங்கு வகித்துள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரும் பலமாக வந்து நிற்கிறது.

காட்சிகளில் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது ஒளிப்பதிவு.

அனைத்து தாய்மார்களையும் தெய்வமென போற்றும் மகளிர் தினத்தில் இப்படம் வெளியாகியிருப்பது மகிழ்ச்சி.

குடும்பத்தோடு கண்டுகளிக்க ஏற்ற காவியமாக இப்படம் வந்திருக்கிறது.

ஜே பேபி – வணங்கலாம்…

Related post