மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்

 மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

கேரளாவைத் தாண்டி தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

பல கோடிகளை வசூலாக குவித்து வருகிறது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்து இயக்குனர் சிதம்பரத்தை அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், படத்தினைப் பற்றி அதிகமாக இயக்குனரோடு கலந்துரையாடியிருக்கிறார் ரஜினிகாந்த்.

 

Related post