ஜோஷ்வா விமர்சனம்

 ஜோஷ்வா விமர்சனம்

இயக்கம்: கெளதம் மேனன்

நடிகர்கள்: வருண், கிருஷ்ணா, ராஹீ

ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர்

இசை: கார்த்திக்

தயாரிப்பு: வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்

தயாரிப்பாளர்: ஐசரி கே கணேஷ்

கதைப்படி,

பணத்திற்காக பெரும் தாதாக்களை கொலை செய்து வரும் வேலை செய்து வருகிறார் வருண். இந்நிலையில், அமெரிக்காவில் பெரும் வக்கீலாக இருக்கும் நாயகி ராஹீயை சந்திக்கிறார் வருண். இருவருக்குள்ளும் நட்பு தோன்ற, அது காதலாக மாறுகிறது.

இந்த சமயத்தில் தான் ஒரு கொலைகாரன் என்பதை நாயகி ராஹீயிடம் கூறுகிறார் வருண். இதைக் கேட்டு அதிர்ச்சியான ராஹீ, காதலை வெறுக்கிறார்.

தொடர்ந்து உன்னை காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து இனி கொலை செய்வதை நிறுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார் வருண். இருந்தாலும், ஏற்றுக்கொள்ளாத ராஹீ, அமெரிக்கா சென்று விடுகிறார்.

வருடங்கள் உருண்டோட,பெரும் முதலாளிகளுக்கு பாடி கார்ட்’ஆக வேலை பார்த்து வருகிறார் வருண். இந்நிலையில், போதை பொருள் வழக்கு ஒன்றிற்கு வக்கீலாக ஆஜராகும் ராஹீயை கொல்ல பல டீம் களம் இறங்குகிறது.

ராஹீயைக் காப்பாற்றும் வேலை வருணுக்கு வர, அதை ஏற்றுக் கொள்கிறார்.

இறுதியாக, வருண் மீது ரஹீக்கு காதல் வந்ததா.? ராஹீயின் உயிரை வருண் காப்பாற்றினாரா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைக்கேற்ற கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார் வருண். உடல் மொழி, பேச்சு மொழி என இரண்டிலும் தன்னால் முடிந்த உழைப்பை தாராளமாக கொடுத்து ஜோஸ்வா கதாபாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார் வருண்.

அதிலும், குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆக்‌ஷன் காட்சிகளை மிகக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் வருண்.

காட்சிகளுக்கு அழகு தேவதையாகவும், நடிப்பில் முதிர்ச்சியாகவும் நடித்து ஜொலித்திருக்கிறார் ராஹீ.

இருவருக்குமான காதல் காட்சிகள் மிக அழகாகவே வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது.

மற்றொரு நாயகனாக வரும் கிருஷ்ணா, சில நிமிடங்களே வந்தார். அவரது கதாபாத்திரத்தை முழுமைப்படுத்தாதது சற்று ஏமாற்றமே.

அதிரடி ஆக்‌ஷனாக நகரும் கதையானது, ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போனது கதையோடு நம்மை ஒன்ற வைக்காமல் சென்று விட்டது.

வலுவில்லாத இடைவேளை காட்சிகள், பலவீனமான இரண்டாம் பாதி திரைக்கதை என படத்திற்கு பெரும் சறுக்கலாகவே வந்து நின்றுள்ளது.

பின்னணி இசை இல்லாத இடமேயில்லை, என்று கூறும் அளவிற்கு இசையை கொடுத்திருக்கின்றனர். பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை.

ஒளிப்பதிவு நமக்கு பெரும் ஆறுதல்.

ஜோஷ்வா –  ஜொலிக்கவில்லை.. – 2.5/5

Related post