கலைஞர் 100 விழாவில் குவியும் நட்சத்திரங்கள்!

 கலைஞர் 100 விழாவில் குவியும் நட்சத்திரங்கள்!

சினிமாவில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு என்பது அலப்பறியது. கலைஞர் கருணாநிதியின் புகழை பாடும் வண்ணம் கலைஞர் 100 என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறது தென்னிந்திய திரையுலகினர்கள் சங்கம்.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் கலைஞானி கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழ்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தெலுங்கு பட உலகிலிருந்து சிரஞ்சீவி, வெங்கடேஷ் , மலையாள பட உலகிலிருந்து மம்முட்டி, மோகன்லால், கன்னட பட உலகிலிருந்து சிவராஜ்குமார் மற்றும் இந்தி திரை உலகிலிருந்து முன்னணி நட்சத்திரங்கள் என அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Related post