கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்!?

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்!?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏ ஜி எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய்யின் 69வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி பலரும் கேட்டு வந்த நிலையில், இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியில் இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக தளபதி 69படத்தினை இயக்க ரெடி ஆகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post