கட்சிக்காரன் விமர்சனம்

 கட்சிக்காரன் விமர்சனம்

பிஎஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கட்சிக்காரன் ‘. விஜித் சரவணன், ஸ்வேதா டாரதி, அப்புக்குட்டி மற்றும் சிலர் நடித்துள்ள இப்படத்தின் விமர்சனத்தை வாசிக்கலாம்.

கதைப்படி,

நாயகன் விஜித் சரவணன், தனது தலைவருக்காக முழு விசுவாசத்துடன் உழைக்கிறான். போஸ்டர் ஒட்டுவது, கொடி கட்டுவது, தோரணம் கட்டுவது, கோஷம் போடுவது, கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, விழாக்கள் ஏற்பாடு செய்வது என்று மும்மரமாக ஈடுபடுகிறான்.
இவற்றுக்கெல்லாம் செலவுக்குப் பணம் இல்லாத போது தன் மனைவியின் தாலியை அடகு வைக்கக் கூட தயங்காத ஒரு உண்மைத் தொண்டனாக இருக்கிறார் விஜித்.

அவனது உழைப்பைப் பாராட்டி அவனுக்குத் தேர்தலில் கவுன்சிலர் பதவியில் போட்டியிட வாய்ப்பு வருகிறது. ஆனால் கடைசி நேரத்தில் எதிர்க்கட்சியிலிருந்து கட்சி மாறிய ஒருவனுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டு விடுகிறது.

அக்கட்சி தலைவர் இவருக்கு செய்யும் துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத விஜித். ஒரு கட்சிக்கு தொண்டன் எவ்வளவு முக்கியம் என பாடம் கற்றுத்தர வேண்டும் என முடிவு செய்கிறார்.

தொண்டனின் முக்கியத்துவத்தை உணரவைத்தாரா? என்ன செய்தார் விஜித்? என்பது படத்தின் மீதிக்கதை.

அறிமுக நாயகனாக நடித்தற்கும் விஜித் சரவணன் முதல் படத்தில் பல காட்சிகளில் யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார். ஆனாலும், நடிப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.

இப்படத்தை இயக்கிய ஐயப்பா, சிறந்த கதைக்களத்தையும், நல்ல திரைக்கதையையும் அமைத்து வெற்றி கண்டுள்ளார். ஆனால், தெரிந்த முகங்களை வைத்து இயக்கியிருந்தால் இப்படத்திற்கான வரவேற்பும் ஓட்டமும் சிறப்பாக இருந்திருக்கும். கதையின் முதல் காட்சியிலே கதையை ஆரம்பித்து கடைசி காட்சிவரை கதையை மட்டுமே நகர்த்தியிருக்கிறார்.

ஸ்வேதா டாரதி,அப்புக்குட்டி , சிவ சேனாதிபதி ,ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன், நடிகர் நாசரின் தம்பி ஜவகர் என அனைவருமே கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

மொத்தத்தில், கமர்ஷியலாக இல்லாவிட்டாலும் நல்ல படம் “கட்சிக்காரன்”.

கட்சிக்காரன் – தொண்டனின் வலி

Related post