வேலை இன்னும் முடியலையாம்; “இந்தியன் 2” ஜூன் ரிலீஸ் இல்லை!

 வேலை இன்னும் முடியலையாம்; “இந்தியன் 2” ஜூன் ரிலீஸ் இல்லை!

பிரமாண்ட இயக்குனர் என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால் என நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் பல வருடங்களாக உருவாகி வந்து கொண்டிருக்கும் படம் தான் “இந்தியன் 2”.

பல வருடங்களாகவே இப்படம் தயாரிப்பு பணியில் இருந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதுமட்டுமல்லாமல், படத்தின் நீளம் அதிகமானதால், இந்தியன் 3 ‘ம் உருவாகியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் பணிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதியில் இருந்து இப்படம் தள்ளிச் செல்லும் என்கிறார்கள்.

ஜூலை மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post