லைசென்ஸ் – விமர்சனம்

 லைசென்ஸ் – விமர்சனம்

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் தான் ராஜலெட்சுமி. இவர் முதல் முறையாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் தான் “லைசென்ஸ்”. இப்படத்தினை இயக்கியிருக்கிறார் கணபதி பாலமுருகன்.

இப்படத்தில், ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா, கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராஜலெட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாரதி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ராஜலெட்சுமி, அரசு பள்ளி ஆசிரியையாக வருகிறார். இவரது தந்தையாக வருகிறார் ராதாரவி.

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தட்டிக் கேட்பதில் முதல் ஆளாக இருக்கிறார் பாரதி. அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறலுக்காக நீதிமன்றம் செல்கிறார் பாரதி.

இப்படியான செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தன்னை சுற்றி இருப்பவர்களை பாதுகாத்துக் கொள்ளவும் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டி அரசிடம் கோருகிறார்.

பரீசிலனை செய்த காவல்துறை பாரதியின் வேண்டுகோளை நிராகரித்து விடுகிறது. இதனால், நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுக்கிறார் பாரதி.

இறுதியாக, துப்பாகி லைசென்ஸ் உரிமத்தை பாரதி பெற்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

பாரதியாக நடித்திருக்கும் ராஜலெட்சுமி கதைக்கு தேவையான கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். முதல் படம், ஒரு சில குறைகள் இருந்தாலும் நாயகியாக ஜெயித்திருக்கிறார் ராஜலெட்சுமி.

சிறுவயது பாரதியாக நடித்த, அபி நட்சத்திரா படத்திற்கு மிகப்பெரும் பலம். ஏன் ராஜலெட்சுமி இவ்வளவு அமைதியான சூறாவளியாக இருக்கிறார் என்பதை அடித்தளத்திலிருந்து எடுத்து வந்திருக்கிறார் அபி.

ராதாரவி தனது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

வித்தியாசமான கதையை கையில் எடுத்து அதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதி சற்று தடுமாறினாலும், இரண்டாம் பாதி வேகம் எடுத்து படத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.

சமூகத்தில் நடக்கும் அவலம், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகள், அதை தைரியமாக எடுத்துச் செல்லும் விதம் என ஜான்சி ராணியாக ராஜலெட்சுமி படத்தில் அதகளம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் படத்திற்கு பலமாக வந்து நிற்கிறது – 2.5/5

Related post