எவ்வளவு உயரே பறந்தாலும், கீழே வந்து தான் ஆகணும்.. வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும் இயக்குனர் ரத்னகுமார்!

 எவ்வளவு உயரே பறந்தாலும், கீழே வந்து தான் ஆகணும்.. வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும் இயக்குனர் ரத்னகுமார்!

விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், லியோ படத்தில் வசனம் எழுதியவரும் படத்தின் உதவி இயக்குனருமான ரத்னகுமார் மேடையில் பேசும் போது ,” எவ்வளவு உயரே பறந்தாலும், கீழே வந்து தான் ஆகணும்.” என்று பேசினார்.

ஜெயிலர் பட விழாவில் ரஜினி பேசும் போது கழுகு மற்றும் காகா பற்றிய கதையை கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக ரத்னகுமார் பேசியிருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

சினிமாவில், இரண்டே படங்களை இயக்கிய ரத்னகுமாருக்கு இந்த பேச்சு தேவையில்லாத ஒன்று என்று பலரும் கருத்துகூறி வருகின்றனர்.

ரஜினி பேசியிருந்த கதைக்கு விஜய் பதிலளிப்பார். அதை விடுத்து இவர் ஏன், முந்திக் கொண்டு ஸ்கோர் செய்கிறார் என்றும் கூறிவருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இந்த பேச்சிற்காக ரத்னகுமாரை அழைத்து விஜய் கடிந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related post