புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி; திடீரென விசிட் அடித்த தளபதி விஜய்!

 புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் அனுமதி; திடீரென விசிட் அடித்த தளபதி விஜய்!

விஜய் மக்கள் இயக்க மாநிலப்பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. அதில் அதிகமான ரசிகர்களை அரங்குக்கு வரவழைப்பது, அவர்களைப் பத்திரமாக நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டிற்கு பார்த்து அனுப்பி வைப்பது உள்ளிட்டப் பல்வேறு ஒருங்கிணைப்புப் பணிகளை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநிலப்பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்து வந்தார்.

இதனால் ஏற்பட்ட அயற்சி மற்றும் சோர்வின் காரணமாக புஸ்ஸி ஆனந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 

Related post