லாக்கர் விமர்சனம்

 லாக்கர் விமர்சனம்

இயக்கம்: ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன்

நடிகர்கள்: விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், நிவாஸ் ஆதித்தன்,

இசை: வைகுந்த் ஸ்ரீநிவாசன்

ஒளிப்பதிவு: தணிகைதாசன்

கதைப்படி,

நாயகன் விக்னேஷ் சண்முகம், சில நபர்களை டார்கெட் செய்து ஷேர் மார்க்கெட்டை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதும், சிக்கிக் கொள்ளாமல் பணம் திருடுவதுமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு இருவர் நண்பர்களாக வருகின்றனர்.

நாயகி நிரஞ்சனியை கண்டதும் காதல் புரிகிறார் விக்னேஷ். ஒருதலை காதல் இரு தலை காதலாக மாறுகிறது.

இந்நிலையில், நாயகன் விக்னேஷ் செய்யும் திருட்டு வேலை நாயகி நிரஞ்சனிக்கு தெரிய வர, நாயகனை விட்டு பிரிகிறார்.

காதலிக்காகவும் தன்னுடைய காதலுக்காகவும் இனி திருட்டு வேலையில் ஈடுபட மாட்டேன் என மனம் மாறுகிறார் விக்னேஷ்.

மீண்டும் காதல் கைசேர, மெயின் வில்லனான நிவாஸ் ஆதித்தனை பார்க்கிறார் நிரஞ்சனி. தனது குடும்பம் நிவாஸால் தான் அழிந்தது என்று விக்னேஷிடம் கூறுகிறார் நிரஞ்சனி.

தனக்காக நிவாஸை அழிக்க வேண்டும் என்று தனது காதலனுக்கு அன்பு கட்டளையிடுகிறார் நிரஞ்சனி.

இறுதியில் வில்லனை எப்படி அழித்தார்கள்.?? வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சி என்ன.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் விக்னேஷ் சண்முகம், கதைக்கேற்ற கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக நிச்சயமாக வலம் வருவார்.

இருந்தாலும், கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி தன்னை செதுக்கிக் கொள்ள வேண்டும் விக்னேஷ்.

அழகு தேவதையாக காட்சிக்கு காட்சி நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் நிரஞ்சனி. நடிப்பிலும் அழகிலும் நம்மை வெகுவாக கவர்கிறார்.

வில்லனாக வந்த நிவாஸ் ஆதித்தன் இன்னும் சற்று மெனக்கெட்டு தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருந்திருக்கலாம்.

படத்தின் கதை வேறொரு படத்தினை பார்த்த ஒரு ஃபீலை ஆங்காங்கே கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

கதையில் இன்னும் சற்று மெனக்கெட்டிருந்திருக்கலாம். க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் கூட எளிதில் நாம் கண்டுபிடிக்கும் அளவிற்கு இருப்பது சற்று படத்திற்கு தொய்வு தான்.

போலீஸ் அதிகாரியாக நடித்தவர் மிடுக்கென வந்து காட்சிகளை வேகம் ஏற்றுகிறார்.

திரைக்கதையில் சற்று வேகம் இருந்ததால், படம் விறுவிறுப்பாக நகர்கிறது.

ஒளிப்பதிவு பலம். பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசை இன்னும் சற்று கூடுதல் கவனம் கொடுத்திருந்திருக்கலாம்.

லாக்கர் – விறுவிறுப்பு..

Related post