லவ் விமர்சனம்

 லவ் விமர்சனம்

ஆர் பி பாலா இயக்கத்தில் பரத் மற்றும் வாணிபோஜன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லவ்.

கதைப்படி,

கணவன் மனைவியான பரத் மற்றும் வாணி போஜனுக்கு இடையே அடிக்கடி சண்டை வருகிறது.  தொழிலில் சரியாக முன்னேற்றம் இல்லாததால், அவ்வப்போது மதுவும் அருந்துகிறார் பரத். வேறொரு பெண்ணுடனும் உடலுறவில் இருக்கிறார் பரத்.

இந்நிலையில், இருவருக்குமான சண்டை அதிகமாக, வேகத்தில் வாணி போஜனை அடித்து விடுகிறார் பரத்.

இதனால், வாணிபோஜன் இறந்து விடுகிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை..

இந்த காட்சியெல்லாம், படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலே நடந்து முடிந்துவிட்டது. அதன் பிறகு நடக்கும் கதையெல்லாம், நமக்குள் ஒட்டிக் கொள்ளாமல் வேறு எதோ ஒரு திசை நோக்கி நகர்கிறது.

காட்சிகள் மிகவும்  மெதுவாக நகர்ந்து செல்வது, கதையின் ஓட்டத்திற்கு பலவீனமாக வந்து நிற்கிறது. த்ரில்லிங்க் கதையாக சென்றாலும், ஒவ்வொரு காட்சிக்கும் இடையே அவ்வளவான இடைவெளி, காட்சியை நகர்த்துவதில் இயக்குனர் நன்றாகவே சிரமப்பட்டிருக்கிறார் என்பது கண்கூடாக நன்றாக தெரிகிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே, வாணி போஜன் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து உடைப்பதும், பரத் குடித்துக் கொண்டே இருப்பதும், மனைவியை விடுத்து வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதும் என படத்தில் ஒட்டாத காட்சிகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில், ஸ்வயம் சிதா, மற்றும் டேனி இருவரும் ஒரு சில காட்சிகள் தான் எட்டிப் பார்த்து விட்டுச் சென்றுவிடுகின்றனர். பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அழகாக செய்து முடித்திருக்கிறார்க்ள். வாணி போஜன், தேவதையாக காட்சி தந்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். அதிலும், இறந்தது போன்ற காட்சியில் கண் இமைக்காமல், நடித்தது அப்ளாஷ்.. ஆரம்பத்தில் சற்று ஓகே என்றாலும் போக போக போர் அடித்து விட்டார் விவேக் பிரசன்னா..
அந்த சரக்கு பாட்டில் என்ன அக்‌ஷய பாத்திரமா… ஊத்த ஊத்த வந்துகிட்டே இருக்கு
இசையமைப்பாளர் ரோனி ரஃபேல்  இசையில், பின்னணி இசை மிரட்டலாக கொடுத்திருக்கிறார். கதையோடு சேர்ந்து பயணம் செய்திருக்கிறது பின்னணி இசை.
படத்தின் மிகப்பெரும் பலம், தூண் என்று எது வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம் ஒளிப்பதிவை.., பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் தளத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
இருவரும் சண்டையிடும் காட்சி, பாத்ரூமிற்குள் பரத் அமர்ந்து கொண்டு வாணி போஜனை பார்க்கும் காட்சி என படத்தில் பல காட்சிகளை கைதட்டல் கொடுக்கும் அளவிற்கு ஒளிப்பதிவை கொடுத்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையா.
திரைக்கதையின் ஓட்டத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் லவ் இன்னொரு லவ் டுடே’வாக ஹிட் கொடுத்திருக்கலாம்… ஆனால்,
லவ் – காதல் என்ற காவியத்தை கொடுத்த பரத், லவ் என்ற் சோகத்தையும் கொடுத்திருக்கிறார்.. –  2.5/5

Related post