எல் ஜி எம் விமர்சனம்

 எல் ஜி எம் விமர்சனம்

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “எல் ஜி எம்”. படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

கதைப்படி,

நாயகனாக வரும் ஹரீஷ் கல்யாண், ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு, அம்மாவாக வருகிறார் நதியா.. சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டதால், அம்மாவிற்கு மகனும் மகனுக்கு அம்மாவுமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹரீஷ் கல்யாண் தனது அலுவலகத்தி பணிபுரியும் இவானாவை காதலிக்கிறார். காதலை ஏற்றுக் கொள்ளும் இவானா, திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனம் வாழ ஆசைப்படுகிறார். அதாவது, நதியாவை விட்டு தனியாக இருக்க வேண்டும் என்று. , இதற்கு சம்மதிக்காத ஹரீஷ் கல்யாண், இவானாவை பிரிகிறார்.

ஒருகட்டத்தில், இவானா நதியாவோடு சேர்ந்து பழகி பார்க்க ஆசைப்படுகிறார். இதற்காக ஒரு லாங்க் ட்ரிப் போகலாம் என்று இவானா கூற, அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் ஹரீஷ் கல்யாண்.

கடைசியாக, இந்த ட்ரிப்பில் இவானாவும் நதியாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்களா.? ஹரீஷ் கல்யாணின் கல்யாணம் நடந்தேறியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஹரீஷ் கல்யாண், இயக்குனர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை மட்டும் செய்திருக்கிறார்.  படத்தின் முதல் பாதியில் பயணிக்கும் ஹரீஷ் கல்யாண், இரண்டாம் பாதியில் ஆங்காங்கே வந்து எட்டி மட்டும் பார்த்துவிட்டுச் செல்கிறார்.  கூர்க்கில் இருந்து கோவா செல்வதும் கோவாவிலிருந்து கூர்க்கிற்குச் செல்வதுமாய் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒருகட்டத்தில், எங்கப்பா இருக்கீங்கன்னு கேள்வி எழுப்ப வைத்துவிட்டார்கள்.

அழகான தேவதையாக வந்து மனசுக்குள் சட்டென்று ஒட்டிக் கொள்கிறார் இவானா. லவ்டுடே படத்தில் பார்த்த அதே க்யூட்னஸ் ஓவர்லோட் ஆகியுள்ளது. இந்த படத்திற்கு ஏற்ற கதாபாத்திரமாக கண்ணில் தெரிகிறார் இவானா.

ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா இவர்களுக்கிடையேயான காதல் காட்சி ரசிக்க வைத்தது.. முதல் பாதி நம்மையும் கதைக்குள் பயணப்படும்படியாக கொண்டு சென்றிருப்பதால் ரசிக்க வைத்திருக்கிறது. இரண்டாம் பாதிஏனோ மனதிற்குள் ஒட்டிக் கொள்ளாமல் தனித்து விடப்பட்ட கதையாக செல்வது படத்திற்கு மிகப்பெரும் சறுக்கல் தான்.

முதல் பாதியில் ஏதோ சலிப்புடனே நடித்து வந்த நதியா, இரண்டாம் பாதியில் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்..

விஸ்வஜித் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக கோவாவை அழகூற காட்டியிருக்கிறார். யோகிபாபு, இவானா, நதியா மூவரும் குதிரை வண்டியில் செல்லும் போது வெளிச்சத்தைக் கொடுத்து ஒளிப்பதிவை நன்றாகவே கொடுத்திருந்திருக்கலாம்…

ரமேஷ் தமிழ்மணியே இசையையும் கொடுத்திருக்கிறார். பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஓகே ரகமாக இருந்தது.

கதை ஓகே என்றாலும், திரைக்கதையில் இன்னும் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கலாம் என்றே தோன்றியது.

யோகிபாபுவின் கெளண்டர் காமெடி படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. ஆர் ஜே விஜய்யின் கெளண்டர் காமெடி சற்று ஆங்காங்கே ரசிக்க வைத்திருக்கிறது

இவானாவின் க்யூட்னஸ், ரமேஷ் தமிழ்மணியின் பின்னணி இசை, கதை இதற்காக நிச்சயம் ஒரு முறை எல் ஜி எம் படத்திற்கு ஒருமுறை சென்று வரலாம்…

ஆபாச வார்த்தைகள் எதுவும் இல்லாமல் குடும்பத்தோடு சென்று பார்க்கும்படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி.

Lets Get Married – குடும்பத்தோடு ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம்… –  3/5

Related post