மதிமாறன் விமர்சனம்

 மதிமாறன் விமர்சனம்

இயக்கம்: மந்த்ரா வீரபாண்டியன்

நடிகர்கள்: வெங்கட் செங்குட்டுவன், இவானா, ஆராத்யா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளம் நரேன், பவா செல்லத்துரை

ஒளிப்பதிவு: பர்வேஸ்

இசை: கார்த்திக் ராஜா

கதைப்படி,

கிராமத்தில் போஸ்ட் மேனாக பணிபுரிவர் எம் எஸ் பாஸ்கர். இவருக்கு இரண்டு பிள்ளைகள். வெங்கட் செங்குட்டுவன் மற்றும் இவானா.

இதில் வெங்கட் செங்குட்டுவன் உயரம் வளர்ச்சியில் சற்று குறைவாக இருக்கிறார். இதனால் பலரும் அவரை பல விதமாக கேலி செய்கின்றனர்.

கல்லூரி படித்து வருகின்றனர் இருவரும். ஒருநாள், இவானா தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி விடுகிறார். இதனால் மனமுடைந்த பெற்றோர்கள் எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் இறந்து விடுகிறார்கள்.

இதனால் உடைந்து போலும் வெங்கட் செங்குட்டுவன், தங்கையை தேடி சென்னை வருகிறார்.

அதே சமயம், பல பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டு வரும் சம்பவம் சென்னையை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த வழக்கை விசாரித்து வருகிறது காவல்துறை.

வெங்கட் செங்குட்டுவன் தனது சகோதரியை சந்தித்த பின் என்ன நடந்தது.?? பெண்களை கொன்று குவித்து வரும் கொடூரனை போலீஸ் கண்டுபிடித்ததா .?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் வெங்கட் செங்குட்டுவனுக்கு இது முதல் படம் தான் என்பது போல் இல்லாமல், அனுபவ நடிகர் எப்படியொரு நடிப்பைக் கொடுப்பாரோ அந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார். முதல் ஐந்து நிமிடங்களிலே நெடுமாறன் கதாபாத்திரத்திற்குள் சென்று, நம்மையும் கூடவே இழுத்துச் சென்று விட்டார்.

கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. படத்தின் ஓட்டம் கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறது.

நடிகைகளான இவானா மற்றும் ஆராத்யா இருவரும் கதாபாத்திரங்களாகவே மாறியுள்ளனர். போலீஸ் சப் – இன்ஸ்பெக்டராக ஆராத்யா சரியாக பொருந்தியிருக்கிறார்.

க்ளைமாக்ஸில் வெங்கட் செங்குட்டுவன் பேசும் வசனங்கள் கூடுதல் பலம்.

கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட். பின்னணி இசை கதைக்கு ஏற்ற பயணமாக சேர்ந்திருக்கிறது.

வெளிச்சத்தை அளவாக கொடுத்து ஒளிப்பதிவாளர் தனது நேர்த்தியைக் கொடுத்திருக்கிறார்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் சினிமாவிற்கு முத்தான ஒரு படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் மதிமாறன் நிச்சயம் ஒரு முத்திரை பதிக்கும். –  3/5

Related post