பாம்பாட்டம் விமர்சனம்

 பாம்பாட்டம் விமர்சனம்

இயக்கம்: வி சி வடிவுடையான்

நடிகர்கள்: ஜீவன், மல்லிகா ஷெராவத், ரமேஷ் கண்ணா, ஆண்ட்ரியா குருநாதன், லிவிங்ஸ்டன், கராத்தே ராஜா, ரிக்கின், சரவணன், சக்தி சரவணன், ரித்திகா சென், மல்லிகா ஷெராவத், சுமன்

ஒளிப்பதிவு: இனியன்

இசை: அம்ரீஷ்

கதைப்படி,

சுதந்திரம் அடைவதற்கு முன் நடந்த காலகட்டத்தை மையப்படுத்தி கதை நகர்கிறது. படத்தில் ராணி மகாதேவி நகரை ஆண்டு வருகிறார்.

இச்சமயத்தில், ஜோசியர் ஒருவர் பாம்பு கடித்து ராணி இறந்து விடுவார் என்கிறார். இதனால், ராணி மகாதேவி நகரில் இருக்கும் பாம்புகளை கொல்லுமாறு உத்தரவிடுகிறார்.

பாம்புகள் அனைத்தும் கொல்லப்பட, ஒரு பாம்பு மட்டும் தப்பி, ராணியை கொன்று விடுகிறது. அதன் தொடர்ச்சியாக ராணியின் மகளும் பாம்புகடியால் தான் இறப்பார் என்று கூற, அந்த அரண்மனையை விட்டு வெளியேறுகிறார் ராணியின் மகள்.

அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றுவதாக ஊர் முழுக்க பேசப்பட, இதனை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார், அதன் பின்பு என்ன ஆனது என்பதே பாம்பாட்டம் படத்தின் கதை.

அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் ஜீவன். கதைக்கு என்ன தேவையோ அதை அளவோடு கொடுத்திருக்கிறார் ஜீவன்.

ராணியாக வந்த மல்லிகா ஷெராவத், நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மற்றபடி படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை அளவோடு செய்து முடித்திருக்கின்றனர்.

பின்னணி இசையில் அம்ரீஷ் மிரள வைத்திருக்கிறார். ஒளிப்பதிவும் ஓகே ரகம் தான்.

இம்மாதிரியான படங்களுக்கு சிஜி காட்சிகள் மிகவும் முக்கியம். படக்குழுவினர் அதில் கோட்டை விட்டதால் படம் பெரிதான ஒரு ஈர்ப்பைக் கொடுக்கவில்லை.

பாம்பாட்டம் – சிஜி’யில் விடப்பட்ட கோட்டை… –  2.5/5

Related post