வித்தைக்காரன் விமர்சனம்

 வித்தைக்காரன் விமர்சனம்

இயக்கம்: வெங்கி

நடிகர்கள்: சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா, ஜான் விஜய், பவல், ஜப்பான் குமார்

ஒளிப்பதிவு: யுவா கார்த்திக்

இசை: வி பி ஆர்

தயாரிப்பு: வொய்ட் கார்பட் பிலிம்ஸ்

தயாரிப்பாளர்: விஜய் பாண்டி

கதைப்படி,

மேஜிக் கலை தெரிந்தவராக வருகிறார் சதீஷ். மூன்று கடத்தல் மன்னன்கள் இருக்கின்றனர். கடத்தல்காரனாக வரும் சுப்ரமணியம் சிவாவோடு இணைந்து தங்கத்தை கடத்த முயல்கின்றார் சதீஷ்.

கடத்தல்காரர்களிடம் இருந்து தங்கம் மற்றும் வைரத்தை கடத்த முயற்சி செய்கிறார் சதீஷ். இறுதியில் இந்த கடத்தல் வெற்றிகரமாக முடிந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சதீஷுக்கு பில் டப் சாங், ஓபனிங் மியூசிக் என அனைத்தும் பக்காவாக இருந்தும் காட்சிகளுக்கு பொருத்தமில்லாமலே வந்து செல்கிறார். பேசாம காமெடியனாவே இருந்திருக்கலாமோ என்று எண்ணும் அளவிற்கு நடிப்பில் பல இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார் சதீஷ்.

நான் தான் ஹீரோ என்று வலுக்கட்டாயமாக ஒவ்வொரு காட்சியிலும் கூறும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சதீஷ்.

ஆனந்தராஜின் காமெடி கோட்டா ஒரு சில இடங்களில் மட்டுமே எடுபட்டிருக்கிறது.

மதுசூதனன், சுப்ரமணியம் சிவா, ஜான் விஜய், பவல் என அனைவரும் தங்களால் முடிந்த நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். இவர்களின் நடிப்பும் படத்தில் பெரிதாக ஜொலிக்கவில்லை. திரைக்கதையில் இயக்குனர் பெரிதாகவே கவனம் செலுத்தியிருக்கலாம்.

எடிட்டிங்கில் சற்று கூடுதலாகவே கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவு நமக்கு சற்று ஆறுதல் தான்.

சோதனையில் ஆரம்பித்த முதல் பாதி ஆறுதல் அளித்தது இரண்டாம் பாதி.

பின்னணி இசையும் பெரிதான ஒரு ஈர்ப்பைக் கொடுக்கவில்லை. டார்க் காமெடி என்ற பெயரில் சோதனை செய்திருக்கிறார்கள்.

வித்தைக்காரன் – வித்தை பெரிதாக எடுபடவில்லை…. –  2.5/5

Related post