பரிவர்த்தனை விமர்சனம்

 பரிவர்த்தனை விமர்சனம்

திரைக்கதை & இயக்கம் : எஸ் மணிபாரதி

கதை & வசனம் : செந்தில்வேல்

நடிகர்கள் : சுர்ஜித், சுவாதி, ராஜேஷ்வரி, மோஹித், பாரதி மோகன், திவ்யா ஸ்ரீதர்,

இசை : ரிஷாந்த் அர்வின்

ஒளிப்பதிவு : கோகுல்

கதைப்படி,

சிறு வயது முதல் பால்காரன் பையனான மோஹித்தும் பண்ணையார் பொண்ணும் படித்து வருகிறாராகள். சில வருடங்களுக்கு பிறகு காதலிக்கிறார்கள். இவர்கள் காதல் பண்ணையாருக்கு தெரியவர பெண்ணை சொந்தகாரங்க வீட்டுக்கு அனுப்பிவிட்டு பால்காரர் பையனை திருடனாக பட்டம் கட்டி அடித்துவிடுகிறார்கள்.

இதனால் பால்காரருக்கு ஊருக்குள் தலைகுணிவு ஏற்படுகிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத பால்காரர், தனது மகனை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று விடுகிறார். அங்கு தன் மகனை நன்கு படிக்க வைத்து டாக்டராக்கி விடுகிறார்,

தனியாக ஒரு மருத்துவமனையும் நடத்துகிறார் சுர்ஜித்தாக உருமாறும் மோஹித்.

தனது தந்தையின் வற்புறுத்தலால், சுர்ஜீத் சுவாதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். தனது இளம் வயது காதலியின் ஞாபகத்தால் சுவாதியை மனைவியாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வருகிறார் சுர்ஜீத். கணவன் காதலித்த பெண் யார் என்று கண்டுபிடித்து சேர்த்து வைத்தரா இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை 

நாயகன் சுர்ஜித் நாயகி சுவாதி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறுவயது நாயகன், நாயகியாக நடித்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். மற்றும் இதில் நடித்த பாரதிமோகன் இளம் வயது நாயகர்களாக நடித்த விக்ரம் ஆனந்த் மாஸ்டர் விதுன் இளவயது நாயகிகளாக சுமேகா , ஹாசினி மற்றும் இவர்களுடன் ரயில் கார்த்தியும் நடித்துள்ளார்.

 கோகுலின் ஒளிப்பதிவு பலம் , ரஷாந்த் அர்வின் இசை அருமை, கவிஞர் வி.ஜே.பி ரகுபதியின் பாடல்களின் வரிகள் ரசிக்கும் விதமாக அமைந்தது பலம். 

காத்திருந்து காலம் கடந்தாலும் காதல் கைகூடும் என்ற கருத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க இளமை ததும்பும் காதல் கதையாக கொடுத்துள்ளார் இயக்குனர் மணிபாரதி.
வசனங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். இருப்பினும் காதலுக்காக

அனைத்தையும் ஏற்றுக் கொண்டு பரிவர்த்தனையை கொண்டாடலாம்.. – 2.75/5

Related post