ரேசர் திரைவிமர்சனம்

 ரேசர் திரைவிமர்சனம்

அகில் சந்தோஷ், லாவண்யா, ஆறு பாலா, சுப்பிரமணியன், பார்வதி, சரத் மற்றும் பலர் நடிப்பில், ஹாஸ்டலர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், சாட்ஸ் ரெக்ஸ் இயக்கத்தில் உருவான படம் “ரேசர்”.

எதை பேசுகிறது இப்படம்?

நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையையும், அப்படி பட்ட ஒரு குடும்பத்தில் பிறகும் ஒரு ஆணின் கனவு, லட்சியம், ஆசை, பொறுப்பு என அவனின் உணர்வுகளையும், “ஸ்ட்ரீட் பைக் ரேஸின்” முறைகள், அதில் இருக்கும் நிறை குறை என பல வற்றையும் மிக எளிமையாக இப்படம் பேசியுள்ளது.

கதைப்படி,

சிறு வயதில் சைக்கில் வாங்கிய பின் ரேஸ் ஓட்ட ஆரம்பிக்கிறார் ஹீரோ அகில். அதன் பின் தானாகவே பைக் ஓட்ட கற்றுக்கொண்டு வளர்ந்த பின் அப்பாவிடம் பைக் கேட்கிறார். அவருக்கு “மோட்டோ ஜிபி” ரேஸில் கலந்து கொள்ள ஆசை இருப்பதாகவும் தெரிவிக்கிறார். அதற்கு அப்புறம் என்ன? எல்லார் வீட்லயும் நடக்குறது தான்…

காலேஜ் போனதுக்கு பிறகும் பைக் கிடைக்கல, பைக் வாங்கலாம்னு அப்பா சொன்னா.. அதையும் கெடுத்துவிட ஒருத்தர் வருவாரு… வீட்டுக்கு தெரியாம சில விஷயங்கள் நடக்கும். இது போல மிடில் க்ளாஸ் வாழ்க்கையில நடக்குற பல நிகழ்வுகள் நடக்கும். ஆனால், அதை மீறி ஹீரோ அகில் நினைத்ததை முடித்தாரா? வீட்டின் பொறுப்பை மட்டும் ஏற்றுக் கொண்டாரா? அவருக்கு பிடித்த மாதிரி அவர் லைப் மாறியதா? இல்லையா? என்பது படத்தின் மீதி வாழ்க்கை…

இயக்குனர் சாட்ஸ் ரெக்ஸ் அவர்களுக்கு தனி பாராட்டுகளை தெரிவித்தாக வேண்டும். யதார்த்தமான ஒரு வாழ்க்கையை படமாக அமைப்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனெனில், அது நம் வாழ்க்கையுடன் ஒத்துப்போனால் தான் படம் வெற்றியடையும். கொஞ்சம், சினிமா தனமாக மாறினாலும் படத்தின் போக்கு வேறு திசையில் சென்றுவிடும்.

இன்டர்வலுக்கு முன் ஒரு 20 நிமிடம் படம் சிறிது தொய்வடைந்தாலும் இரண்டாம் பாதி ரேஸ் போல் வேகமாக சென்றுவிட்டது. யதார்த்த வசனம், வாழ்க்கைக்கு ஒத்துப்போகும் விதத்தில் அமைத்த காட்சிகள் அனைத்தும் நம்மை ரசிக்க வைக்கிறது.

இதனை தாண்டி, ஸ்ட்ரீட் ரேஸ் பற்றி அவர் கொடுத்த தகவல்கள், அதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் என அனைத்தும் சரியாக இருந்தது. அடுத்த படத்திலும் இதே போல் ஆடியன்ஸை ரசிக்க வைக்க வாழ்த்துக்கள்.

நாயகன் அகில், தாடி மீசை இல்லாமல் நடிகர் “நரேன்” போன்றும். தாடியுடன் பிக் பாஸ் “தர்ஷன்” போன்றும் இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் பெரிதா செட் ஆகவில்லை என்றாலும், அப்பாவிடம் திட்டு வாங்கும் காட்சி, நண்பர்களுடன் இருக்கும் காட்சி என அனைத்திலும் நன்றாக நடித்துள்ளார். இருந்தாலும், நடிப்பில் கூடுதல் பயிற்சி தேவை.

படத்தில் உடன் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும். வந்து சென்ற காட்சிகளுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

பிரபாகரின் ஒளிப்பதிவு பல காட்சிகளில் பாராட்டை பெறுகிறது.

பரத்தின் இசை படத்தின் ஓட்டத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

ரேசர் – மிடில் க்ளாஸின் வாழ்க்கை –  (3/5)

Related post