சில நொடிகளில் விமர்சனம்

 சில நொடிகளில் விமர்சனம்

இயக்கம்: வினய் பரத்வாஜ்

இசை: தர்ஷனா

ஒளிப்பதிவு:அபிமன்யூ சதானந்தன்

நடிகர்கள்: ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த்

கதைப்படி,

லண்டனில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் ரிச்சர்ட் ரிஷி. இவரது மனைவியாக வருகிறார் புன்னகை பூ கீதா..

இவருக்கும் அங்கு மாடலிங்க் துறையில் இருக்கும் யாஷிகாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் காதலாக மாற, பின் இருவரும் மிக மிக நெருக்கமாகி விடுகிறார்கள்.

புன்னகை பூ கீதா வீட்டில் இல்லாத சமயத்தில் ரிச்சர்ட் ரிஷியும் யாஷிகாவும் வீட்டில் உல்லாசமாக இருக்கிறார்கள்.

போதை மாத்திரை அளவுக்கு அதிகமாக எடுத்ததால் எதிர்பாராத விதமாக யாஷிகா அப்போது இறந்து விட, பிணத்தை ஒரு பெட்டியில் வைத்து காட்டுப் பகுதியில் சென்று குழி தோண்டி புதைத்து விடுகிறார்.

அதன்பிறகு, அடிக்கடி யாஷிகாவின் நினைவுகள் ரிச்சர்ட் ரிஷியை தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறது.

வீட்டிலும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார். தனது மனைவியுடனும் சண்டை போடுகிறார். இந்த சமயத்தில், பெண் பத்திரிகையாளர் ஒருவர், யாஷிகாவை பற்றி கூறி ரிச்சர்ட் இடமிருந்து பணம் பறிக்க முயல்கிறார்.

இதை அனைத்தையும் ரிச்சர்ட் எப்படி கையாண்டார் என்பதே படத்தின் மீதிக் கதை.

படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலே யாஷிகா இறந்துவிட, கதை எதை நோக்கி பயணப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை… இழுத்துக் கொண்டே செல்கிறது.

எதையாவது சொல்லி கதைக்குள் போங்கப்பா என்று சொல்லும் போது, இண்டர்வெல் வந்து விடுகிறது. அதன்பிறகு படம் ஆரம்பித்து மீண்டும் ரிச்சர்ட் கனவில் யாஷிகாவின் தொல்லை…

இதுக்கு ஒரு முடிவு இல்லையா என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேலையில், க்ளைமாக்ஸ் நெருங்க அங்கு இருக்கிறது ட்விஸ்ட் காட்சிகள். இதுக்கா இவ்வளவு அக்கப்போர் என்று கூறும் அளவிற்கு பொறுமையை சோதித்து விட்டார்கள்.

க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் மட்டுமே படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறது.

நடிகர்கள் அவரவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்திருக்கிறார்கள்..

சில நொடிகளில் – முடித்திருந்திருக்கலாம்….

Related post