டிசம்பர் 8க்கு தள்ளிச் சென்ற “கட்டில்”

 டிசம்பர் 8க்கு தள்ளிச் சென்ற “கட்டில்”

Maple Leafs Productions தயாரிப்பில், எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.

இப்படத்தில் ஹீரோயினாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியீடாக படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 8 ஆம் தேதி படம் திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related post