சம்பளம் வாங்குவதில் சூர்யா மற்றும் தனுஷை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்!

 சம்பளம் வாங்குவதில் சூர்யா மற்றும் தனுஷை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்!

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் சூர்யா மற்றும் தனுஷை சிவகார்த்திகேயன் பின்னுக்கு தள்ளிவிட்டதாக தகவல் ஒன்று கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ந்து நூறு கோடி ரூபாய் வசூலித்ததால், சிவகார்த்திகேயனுக்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.

அதேசமயம் தனுஷுக்கு 25 கோடி ரூபாய்வரைதான் சம்பளமாக கொடுக்கப்படுகிறது என கூறப்படுது.

இதற்கிடையில், கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் முதலிடத்தில் விஜய் (150 கோடி ரூபாய்க்கும் மேல்), இரண்டாம் இடத்தில் ரஜினிகாந்த் (100 கோடி ரூபாய்க்கும் மேல்) மூன்றாம் இடத்தில் அஜித் (90 கோடி ரூபாய்) நான்காம் இடத்தில் கமல் ஹாசன் (80 கோடி ரூபாய்) இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post