விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்!?

 விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்!?

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ”கோட்” படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பானது தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

ஓரிரு வாரங்களில் படப்பிடிப்பானது முழுமையாக நிறைவு பெறும் நிலையில் இருக்கும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

உண்மை என்னவென்றால், இரு தினங்களுக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பில் வெங்கட் பிரபுவை நேரில் சந்தித்திருக்கிறார்.

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். அப்படத்தின் பணிகளுக்காக தான் வெங்கட் பிரபுவை சந்திக்க சிவகார்த்திகேயன் அங்கு சென்றிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

 

Related post