இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “இந்தியன்”. பல வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்க இக்கூட்டணி கைகோர்த்தது. அதேபோல், இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் காட்சிகள் அதிகம் இருக்கின்ற காரணத்தினால் மூன்றாம் பாகத்தை உருவாக்க இருக்கிறார்கள். மூன்றாம் பாகம் முழுமையடைய இன்னும் 40 நாட்கள் ஷூட்டிங் எடுக்கவிருப்பதால் கமல்ஹாசன் அதற்கான கால்ஷீட்டை தருவதாக கூறியிருக்கிறார்.Read More
Tags : indian 3
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் தற்போது தயாராகி வருகிறது. நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறிக் கொண்டு வரும் சூழலில், படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். லைகா நிறுவனத்தோடு இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் “இந்தியன் 2” படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு […]Read More