உருவாகிறது “இந்தியன் 3”?
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “இந்தியன்”.
பல வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுக்க இக்கூட்டணி கைகோர்த்தது.
அதேபோல், இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் காட்சிகள் அதிகம் இருக்கின்ற காரணத்தினால் மூன்றாம் பாகத்தை உருவாக்க இருக்கிறார்கள்.
மூன்றாம் பாகம் முழுமையடைய இன்னும் 40 நாட்கள் ஷூட்டிங் எடுக்கவிருப்பதால் கமல்ஹாசன் அதற்கான கால்ஷீட்டை தருவதாக கூறியிருக்கிறார்.