இந்தியன் 3… அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

 இந்தியன் 3… அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் தற்போது தயாராகி வருகிறது.

நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறிக் கொண்டு வரும் சூழலில், படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

லைகா நிறுவனத்தோடு இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் “இந்தியன் 2” படத்தை தயாரித்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி, இந்தியன் 3 பண்ண வேண்டும் என்ற பேச்சு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இந்தியன் 2 வெளிவந்த பிறகு அதை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related post