இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் 23வது படமான இதன் படப்பிடிப்பானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை முடித்ததும் சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இதன் அறிவிப்பு ஏற்கனவே வந்திருந்த நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா தான் சல்மான்கான் ஜோடியாக நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் […]Read More
Tags : rashmika
நடிகர் தனுஷ் தற்போது தான் நடித்து இயக்கும் தனது 50வது படத்தின் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து தனது 51வது படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். தனுஷின் 51வது படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவிருக்கிறார். அதன் ஆரம்ப பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது. Read More
நடிகை ராஷ்மிகா, தற்போது ரன்பீர் கபூருடன் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ‘புஷ்பா 2’, ‘ரெயின்போ’ படங்களின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளவிருக்கிறார். ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் சுமார் 80 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும் அதற்காக ராஷ்மிகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் என்ற செய்தியும் பரவியது. இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மற்றும் அவரது மேனேஜர் கிரண் இருவரும் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ’எங்களுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. நாங்கள் […]Read More