சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா!?

 சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா!?

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனின் 23வது படமான இதன் படப்பிடிப்பானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை முடித்ததும் சல்மான்கானை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

இதன் அறிவிப்பு ஏற்கனவே வந்திருந்த நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தான் சல்மான்கான் ஜோடியாக நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post