D51: தனுஷிற்கு ஜோடியானார் ராஷ்மிகா!

 D51: தனுஷிற்கு ஜோடியானார் ராஷ்மிகா!

நடிகர் தனுஷ் தற்போது தான் நடித்து இயக்கும் தனது 50வது படத்தின் பணிகளில் மும்முரமாக இருந்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து தனது 51வது படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். தனுஷின் 51வது படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவிருக்கிறார்.

அதன் ஆரம்ப பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது.

 

Related post