தமிழரசன் விமர்சனம்

 தமிழரசன் விமர்சனம்

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சோனு சூட், யோகி பாபு நடிப்பில், பாபு யோகீஸ்வரன் இயக்கியுள்ள படம் “தமிழரசன்”.

எதை பேசுகிறது இப்படம்?

ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் வியாபாரத்தையும் அரசியலையும் பேசியுள்ளது இப்படம்.

கதைப்படி,

சப்-இன்ஸ்பெக்டராக வரும் விஜய் ஆண்டனிக்கு, டி.எஸ்.பி. சோனு சூட்டுக்கும், படத்தின் ஆரம்பத்திலே பிரச்சனை ஏற்படுகிறது.

அதன் பின், எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனியின் மகன் மயங்கி விழுகிறார். அப்போது, அவசரத்திற்கு அருகிலுள்ள “லோட்டஸ்” மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் விஜய் ஆண்டனியின் மகன்.

விஜய் ஆண்டனி மகனின் இதயம் பலவீனமாக இருக்கிறது என்றும், அதை மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பு தெரிவிக்கிறது.

அதற்கு கிட்டத்தட்ட 70 லட்சத்துக்கு மேல் செலவாகும் என்றும். அதன் முன் தொகை 20 லட்சம் கட்ட வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.

அதே நேரத்தில், “மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்” இருதய மாற்று சிகிச்சைக்கு அனுமதிக்கபடுவதால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கிறது அந்த மருத்துவமனை.

தன் மகனுக்காக, என்ன செய்தார் விஜய் ஆண்டனி? என்பது படத்தின் மீதிக்கதை…

எப்போதுமே கதை தேர்வில் சரியான கதையை தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி, இம்முறை எதற்காக இப்படியொரு கதையை தேர்வு செய்தார் என்பது அவருக்கு தான் வெளிச்சம்.

நான், சலீம் போன்ற படங்கள் போல் இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ. நடிப்பு எப்போதும் போல் சிறப்பு.

ரம்யா நம்பீசன், சோனு சூட், ராதா ரவி என அனைவரும் கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

சொல்ல வந்த எதையும் முழுமையாக சொல்லாமல், முழுக்க முழுக்க சினிமாட்டிக் படமாக அமைத்திருக்கிறார் இயக்குனர் பாபு யோகீஸ்வரன்.

படம் எடுக்க வேண்டும் என்ற கட்டயத்தோடு திரைக்கதை அமைத்து நம்மை சோதித்திருக்கிறார் இயக்குனர்.

இளையராஜாவிடம் மேலும் இசையமைக்க சரக்கில்லை என்பதை இம்முறையும் தவறாது நிரூபித்துள்ளார் இளையராஜா.

எஸ்.பி.பி-யின் ஒரு பாடல் மட்டுமே ஆறுதலாக அமைந்தது இப்படத்தில்.

தமிழரசன் – சோதித்துள்ளான்.

Related post