நானும் கார் வாங்கிட்டேன்… பூவையார் மகிழ்ச்சி!

 நானும் கார் வாங்கிட்டேன்… பூவையார் மகிழ்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி அத்தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்க் அதிகம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் உருவாகியிருக்கிறார்கள். இதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களின் பேவரெட் பாடகராக வலம் வருகிறார் பூவையார்.

சிறுவனாக நிகழ்ச்சியில் நுழைந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவர் இப்போது படங்களில் நடிப்பது, பாடல்கள் பாடுவது என பிஸியாக இருக்கிறார்.

விஜய்யின் பிகில் மற்றும் மாஸ்டர் படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் காரோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related post