வருடத்துக்கு 30 ஆயிரம் மரங்கள் இலக்கு… – புதிய பயணத்தில் நடிகர் தங்கதுரை

 வருடத்துக்கு 30 ஆயிரம் மரங்கள் இலக்கு… – புதிய பயணத்தில் நடிகர் தங்கதுரை

பிரபல தனியார் தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தங்கதுரை. இவருடைய பழைய ஜோக்குகள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் கால் பதிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகர் தங்கதுரை.

இந்நிலையில், தற்போது மரங்களை நடுவதற்கான பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் தங்கதுரை.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “ கடந்த சில மாதங்களுக்கு முன் பசுமை நாயகன் நடிகர் விவேக் சாரின் மரம் வளர்ப்பை மக்களிடம் எடுத்துச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இதை தலைவர் ரஜினிகாந்த் சாரிடம் சொல்லி வாழ்த்து பெற்று இந்த வருடத்தில் இருந்து மரம் வளர்ப்பை ஆரம்பித்திருக்கிறேன்.

அப்துல்கலாம் ஐயா வழியில் விவேக் சாரின் ஆசியோடு தொடர்ந்து வருடத்துக்கு குறைந்தது 30,000 மரக்கன்றுகள் நட இருக்கிறேன். உத்வேகம் கொடுத்த மக்களுக்கு நன்றி. மரம் வளர்ப்போம், இயற்கை வளம் காப்போம்.” என்று கூறியிருக்கிறார்.

இவரின் இந்த செயலுக்கு பாரட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. 

Related post