”தி கிரேட் இந்தியன் கிச்சன்”; ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

 ”தி கிரேட் இந்தியன் கிச்சன்”; ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

மலையாளத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.
ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடித்திருந்த படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், அவர் எடுக்கும் முடிவு ஆகியவற்றை சொல்லிய படம் இது.

இதன் தமிழ் ரீமேக்கினை இயக்கியிருக்கிறார் ஆர்.கண்ணன். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் வெளியான ட்ரெய்லர் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், இப்படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேல் இப்படத்தை தமிழகம் முழுவதும்ம் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post