திருவின் குரல் விமர்சனம்

 திருவின் குரல் விமர்சனம்

பாரதிராஜா, அருள்நிதி, ஆத்மிகா, ஆஷ்ரப், ஜீவா, ஹரீஷ் சோம சுந்தரம், மகேந்திரன், மோனிகா, சுபத்ரா நடிப்பில், ஹரீஷ் பிரபு இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “திருவின் குரல்”.

எதை பேசுகிறது இப்படம்?

அநீதியை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சாமானியன் தன வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு பகுதியை த்ரில்லிங்காக பேசியுள்ளது இப்படம்.

கதைப்படி,

தனது அப்பா பாரதிராஜா மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார் மகனான அருள்நிதி. வாய் பேச இயலாத அருள்நிதி, ஒரு சிவில் இஞ்சினியரிங்க் பட்டதாரி. பாரதிராஜாவிற்கு எதிர்பாராமல் விபத்து ஏற்பட, அவரை அரசு மருத்துவனைக்கு கூட்டிச் செல்கிறார் அருள்நிதி.

அரசு மருத்துவமனையில் ஆஷ்ரப், ஜீவா, ஹரீஷ் சோம சுந்தரம், மகேந்திரன் உள்ளிட்ட நால்வரும் அவ்வப்போது வழிப்பறி கொள்ளை, கொலை செய்து வருகிறது.. மருத்துவமனையில், லிஃப் ஆப்ரேட்டராக இருக்கும் ஆஷ்ரப்பிடம் அருள்நிதி பகையை ஏற்படுத்தி விடுகிறார்.

அருள்நிதியின் நிம்மதியை சீர்குழைக்க நினைக்கும் அந்த நால்வர் கொண்ட கும்பல், என்னவெல்லாம் செய்தது. அதிலிருந்து அருள்நிதி எப்படி மீண்டார்? அருள்நிதியின் குடும்பத்தை காப்பாற்றினார்? என்பது படத்தின் மீதிக்கதை.

மிடுக்கான தோற்றத்துடனும், எளிமையான உடல் மொழியுடனும் படம் முழுக்க அருள்நிதி பயணித்தது, நம்மை அவரின் பாத்திரத்துடன் இணைத்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்து படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளார்.

ஆஷ்ரப்-ன் நடிப்பும், தோற்றமும் நம்மை மிரட்டும். கொள்ளை கும்பலுக்கு தலைவரும் இவர் தான். மேலும், இவரின் கூட்டாளிகளாக நடித்துள்ள, ஜீவா, ஹரீஷ் சோம சுந்தரம், மகேந்திரன் என அனைவரும் கொடுத்த பாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துள்ளனர்.

உடன் நடித்த கலைஞர்களில் பாரதிராஜாவை தவிர வேறு யாருக்கும் பெரிய ஸ்கோப் இல்லை.

படத்தில் பெரும் பலம் என்னவென்று பார்த்தால், ஆக்ஷன் காட்சிகள் மட்டும் தான். அடிக்கும் காட்சி முதல், கழுத்து அறுக்கும் காட்சி வரை படத்தில் லைவாக இருக்கும்.

ஹரிஷ் பிரபு இயக்கத்தில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். லாஜிக்கில் ஏகப்பட்ட மிஸ்டேக். மேலும், “நான் மகான் அல்ல”, அருள்நிதி நடித்த “மௌன குரு” படத்தின் சாயலும், களமும் தான் “திருவின் குரல்”.

முதல் பாதி விறுவிறுப்பாகவும், எமோஷனாகவும் ஒரு கனெக்ட் கொடுத்தது. ஆனால், இரண்டாம் பாதி சற்று தொய்வு தான். திரைக்கதையில் கூடிடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும்.

சாம் சி எஸ் இசையில் சிறப்பு சேர்த்திருக்கிறார். பாடல்கள் கேட்கும் ரகம்.

திருவின் குரல் – ஓங்கி ஒளித்திருக்கலாம் – (2.75/5)

Related post