அந்த மனசு தான் சார் கடவுள்; விஜய் ஆண்டனிக்கு குவியும் வாழ்த்துகள்!

நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்து வந்த விஜய் ஆண்டனி இயக்குனராகவும் தனது திறமையை நிரூபித்த திரைப்படம் தான் “பிச்சைக்காரன் 2”.
இப்படம் 2 வாரங்களுக்கு முன்பு வெளியானது. தமிழகத்தை தாண்டி தெலுங்கில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது இப்படத்திற்கு.,
தொடர்ந்து தெலுங்கில் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், படத்தின் வெற்றியைக் கொண்டாட நினைத்து சில பிச்சைக்காரர்களை ஆந்திராவின் ராஜமுந்திரியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து அவர்களுக்கு தன் கைகளால் உணவு பரிமாறியிருக்கிறார்.
இந்த செயலுக்காக விஜய் ஆண்டனியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.