அஜித்திற்கு ஜோடி த்ரிஷா!?

 அஜித்திற்கு ஜோடி த்ரிஷா!?

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் “விடா முயற்சி”.

இப்படத்திற்கான முதற்கட்ட பணிகளை செய்து வரும் இயக்குனர் மகிழ் திருமேனி, அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், படத்தின் ஏனைய நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் கொடுத்த வெற்றியில் உற்சாகத்தில் இருந்த த்ரிஷாவிற்கு அடுத்ததாக லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது அஜித்தோடு சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post