முதல் ஷெட்யூலை முடித்த ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணி!

 முதல் ஷெட்யூலை முடித்த ராம்குமார் – விஷ்ணு விஷால் கூட்டணி!

விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் ராம்குமார் இருவரும் இணைந்தாலே அது வெற்றிக் கூட்டணி தான்.

தங்களது முதல் படமாக முண்டாசுப்பட்டி படத்தினை கொடுத்த இந்த டீம், இரண்டாவது வெற்றியாக ராட்சசன் படத்தினை கொடுத்தது. இந்த இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படங்கள்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இக்கூட்டணி கைகோர்த்துள்ளது.

முழுக்க முழுக்க கொடைக்கானலில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பானது சுமார் 15 நாட்கள் தொடர்ந்து அங்கு நடைபெற்று முடிவுற்றிருக்கிறது.

இப்படத்தினை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

 

Related post