அடுத்தடுத்த பிரமாண்ட படங்களில் அதிதி சங்கர்…!

 அடுத்தடுத்த பிரமாண்ட படங்களில் அதிதி சங்கர்…!

கார்த்தி நடித்த விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை “அதிதி சங்கர்”.

தொடர்ந்து “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்த படம் சுமார் 75 கோடி வசூலை குவித்திருந்தது.

தொடர்ந்து மிகப்பெரும் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதிதி சங்கர், தற்போது அதர்வா தம்பியான ஆகாஷுடன் நடித்து வருகிறார்.

இப்படத்தினை முடித்ததும், விஷ்ணு விஷால் ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் நடிகை அதிதி சங்கர்.. பெரிய இயக்குனரின் மகள் என்பதால் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு வருவதாக சில நடிகைகள் சற்று எரிச்சலில் தான் இருக்கிறார்களாம்…

 

Related post