அய்யய்யோ… தென் மாவட்டம் படத்துக்கு நான் இசையமைப்பாளர் இல்லை – பதறியடித்து ட்விட் போட்ட யுவன் ஷங்கர் ராஜா!

 அய்யய்யோ… தென் மாவட்டம் படத்துக்கு நான் இசையமைப்பாளர் இல்லை – பதறியடித்து ட்விட் போட்ட யுவன் ஷங்கர் ராஜா!

நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் நேற்றைய தினம் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது அடுத்த படமான தென்மாவட்டம் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் ” பத்திரிக்கை, ஊடகம் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு தெளிவு. “தென் மாவட்டம்” படத்தின் இசையமைப்பாளர் நான் தான் என்று யாரிடமும் கமிட் ஆகவோ, என்னை யாரும் அணுகவோ இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஆர் கே சுரேஷ் “வணக்கம் யுவன் சார் நீங்கள் திரைப்படம் மற்றும் லைவ் இன் கச்சேரிக்கு ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். ஒப்பந்தத்தை தயவுசெய்து சரிபார்க்கவும் நன்றி” என்று யுவன் ஷங்கர் ராஜாவின் பதிவிற்கு பதிலளித்துள்ளார்.

 

Related post