ஜி வி’க்குப் பதில் யுவன்; சர்தார் 2 அப்டேட்!

 ஜி வி’க்குப் பதில் யுவன்; சர்தார் 2 அப்டேட்!

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “சர்தார்”. படம் மிகப்பெரும் வசூலை வாரிக்குவித்தது.

இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜி வி பிரகாஷ். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.

இப்படத்தில் ஜி வி பிரகாஷ்குமாருக்கு பதிலாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறாராம்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியிடப்படும் எனவும் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Related post