தளபதி 68; மாஸ் அப்டேட் கொடுத்த யுவன்!

 தளபதி 68; மாஸ் அப்டேட் கொடுத்த யுவன்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறார்கள் விஜய்யும் வெங்கட் பிரபும். இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா..

சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜா, தளபதி 68 படத்தில் முதல் பாடல் ஒரு தர லோக்கல் குத்து பாடலாக இருக்கும் என்று கூற அரங்கமே அதிரும் அளவிற்கு கல்லூரி மாணவர்கள் கூச்சலிட்டனர்.

ஷூட்டிங் முன்பே இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related post