வட சென்னை 2 எப்போது.? முக்கிய அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

 வட சென்னை 2 எப்போது.? முக்கிய அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் விடுதலை.

இதன் முதல் பாகம் வெளியாகியுள்ள நிலையில், இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

அதில், இரண்டு படங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. அதை முடித்ததும் கண்டிப்பாக வட சென்னை 2 வேலைகளை ஆரம்பிக்க உள்ளேன் என்று கூறியிருக்கிறார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

விடுதலை 2 மற்றும் வாடிவாசல் இந்த இரண்டு படங்களே அடுத்து அவர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post