வாடிவாசலுக்கு முன் அதிகாரம் படத்தை கையில் எடுத்த வெற்றிமாறன்

 வாடிவாசலுக்கு முன் அதிகாரம் படத்தை கையில் எடுத்த வெற்றிமாறன்

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன், தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலை பாகம் 2 படத்தினை இயக்கிய பிறகு, சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தினை துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராகவா லாரன்ஸை வைத்து “அதிகாரம்” என்ற படத்தினை இயக்கவிருக்கிறாராம்.

நடிகர் சூர்யா அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருவதால், வாடிவாசல் தொடர்ந்து தள்ளிக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், அதிகாரம் படத்தின் முன் பணி வேலைகளை விரைவில் வெற்றிமாறன் துவக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related post