10 கோடியில் பாடல்…. “RC 15″க்கு ஸ்கெட்ச் போட்ட ஷங்கர்!

 10 கோடியில் பாடல்…. “RC 15″க்கு ஸ்கெட்ச் போட்ட ஷங்கர்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உருவாகி வரும் படம் தான் “ஆர் சி 15”. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கப்பட இருக்கிறது.

இதில், பாடல் காட்சி ஒன்றை படமாக்கவிருக்கிறாராம் ஷங்கர். இந்த பாடலை தனது வழக்கமான பாணியில் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கவிருக்கிறார்.

இப்பாடலுக்காக மட்டும் சுமார் 10 கோடி ரூபாயை செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இப்பாடலின் படப்பிடிப்பிற்காக பிரம்மாண்ட செட் ஒன்றை வடிவமைத்து வருகிறார்கள்.

இந்த படத்தில் அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், நவீன்சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

Related post