ஷங்கர் பிறந்தநாளை கொண்டாடிய பிரபலங்கள்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ!

 ஷங்கர் பிறந்தநாளை கொண்டாடிய பிரபலங்கள்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ!

பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனரான ஷங்கர் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ் சினிமா மட்டுமல்லாது உலக சினிமா திரும்பி பார்க்கும் அளவிற்கு பல சாதனை படைப்புகளை உலகிற்கு தந்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தையும் தற்போது இயக்கி வருகிறார் ஷங்கர்.

நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடிய ஷங்கரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாது, லிங்குசாமி, விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ், எஸ் ஜே சூர்யா, கோபிசந்த், ராம் சரண், கெளதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், சசி, லோகேஷ் கனகராஜ் மற்றும் சீயான் விக்ரம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related post