பட்டதாரி ஆன காமெடி நடிகர் முத்துகாளை!
காமெடி நடிகர் முத்துகாளை M.A , B. Lit முடித்த பட்டதாரி ஆகியிருக்கிறார். ஆம்.. நேற்று வெளியான B. Lit மூன்றாம் ஆண்டு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஏற்கெனவே இவர் தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் ( TAMIL NADU OPEN UNIVERSITY ) யில் 2017 ஆண்டில் B.A HISTORY யில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் 2019 இல் M.A TAMIL முதல் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்த நிலையில் நேற்று வெளியான B.Lit தமிழ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்.
வடிவேலு படத்தில் பெரிய அளவில் அறிமுகம் ஆன முத்துகாளை, தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.
பட்டதாரி முடித்த முத்துகாளையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.