பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

 பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து.

இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கான டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Related post